வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்' படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ஆர்.பாலகுருசாமி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன் மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித் துள்ள ‘தெனாலிராமன்’ என்ற திரைப்படத்தை வரும் 18-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அந்தப் படத்தில் கிருஷ்ணதேவ ராயரை அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைத்துள்ளதாக தெரிகிறது. உண்மையான வரலாற்றைத் திரித்து, வியாபார நோக்கில் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
ஆகவே, கிருஷ்ணதேவராயரை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ள ‘தெனாலிராமன்’ படத்தை திரையிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். தெலுங்கு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ‘தெனாலிராமன்’ படத்தை திரை யிட்டு காண்பிக்கும்படி படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை வேறு நீதிபதி களைக் கொண்ட அமர்வின் விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.