தமிழ் சினிமா

மீண்டும் 'பொயட்டு' தனுஷ் வித் அனிருத் - ட்ரெண்டிங்கான 'திருச்சிற்றம்பலம்' பர்ஸ்ட் சிங்கிள் 'தாய்கிழவி' அப்டேட்

செய்திப்பிரிவு

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை என்பதால், ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டது.

அதைப்போலவே 50 நாட்களில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டுமொத்தமாக முடிக்கப்பட்டுவிட்டன. 'திருச்சிற்றம்பலம்' படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் உடன் அனிருத் இணைந்திருப்பதால் ஏற்கனவே இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அது முதல் பாடல் தொடர்பான அப்டேட். பாடல் பெயர் தாய்கிழவி எனத் தொடங்குகிறது. இதை தனுஷே எழுதியுள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோவில் அனிருத் நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்தின் தாய்கிழவி காட்சியை பார்க்கிறார். அவருடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் மற்றும் பொன்னம்பலமும் வீடியோவில் தோன்றுகிறார்கள். வித்தியாசமாக இருக்கும் இந்த வீடியோ இப்போது ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுவருகிறது. இதனிடையே, தாய்கிழவி பாடல் நாளை (24ம் தேதி) வெளியாகிறது.

SCROLL FOR NEXT