தமிழ் சினிமா

வெளியானது 'விசில் சாங்' வாரியர் படத்தின் அடுத்த பாடல் - நடிகர் சூர்யா வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: வாரியர் படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான 'விசில் சாங்' இப்போது வெளியாகி உள்ளது. தமிழில் இதனை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி உள்ளது வாரியர் திரைப்படம். இதில் டோலிவுட் சினிமாவின் நாயகன் ராம் பொத்தினேனி, ஆதி, கீர்த்தி ஷெட்டி, நதியா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த படத்தில் இடம் பெற்றுள்ள புல்லட் பாடல் வெளியாகி இருந்தது. அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் வெளியாகி ஹிட் அடித்திருந்தது. தொடர்ந்து தடதட பாடல் வெளியாகி இருந்தது. இப்போது விசில் பாடல் வெளியாகி உள்ளது. மூன்று பாடல்களையும் தமிழில் பாடலாசிரியர் விவேகா எழுதி உள்ளார்.

விசில் பாடலை தமிழில் அந்தோணிதாசன் பாடியுள்ளார்.

SCROLL FOR NEXT