தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ தீபாவளிக்கு ரிலீஸ்

செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் 'சர்தார்', அஜித்தின் 'ஏகே61' ஜெயம் ரவியின் 'இறைவன்' படங்களுடன் இந்தப் படமும் வெளியிடப்பட உள்ளது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'பிரின்ஸ்'. இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கில் வெளியாகும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரொமான்ஸ் - காமெடி ஜானரில் படம் உருவாகியுள்ளது.

முன்னதாக, இந்தப் படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு, தீபாவளி அன்று படம் வெளியிடப்படும் என அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜாலியான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே தீபாவளிக்கு கார்த்தியின் 'பிரின்ஸ்', ஜெயம் ரவியின் 'இறைவன்'படங்கள் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 'ஏகே61' தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், மேற்கண்ட படங்களின் வருகையால் அஜித் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது. வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

SCROLL FOR NEXT