தமிழ் சினிமா

'பீஸ்ட்' காட்சிகள் லாஜிக் இல்லாதவை - மலையாள நடிகர் கருத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

'பீஸ்ட்' படத்தின் காட்சிகளில் லாஜிக் இல்லை என்று மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் கருத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் வணிக வளாகத்தை கைப்பற்றும் தீவிரவாதிகள் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் அண்மையில் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தபேட்டியில், '' பீஸ்ட் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த படம் குறித்த ட்ரால்களைப்பார்த்தேன்.

'பொதுவாக ஒருவர் எடையை தூக்கினால், முகத்தில் அந்த கஷ்டம் தெரியும். ஆனால், விஜய் அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை. தீவிரவாதியை சூட்கேஸாக எடுத்துச் செல்லும் காட்சிகள் லாஜிக் இல்லாதவை. அதற்கு விஜயை குறை சொல்லமாட்டேன். படக்குழு தான் காரணம். விஜய்யின் 'போக்கிரி' படம் 'பீஸ்ட்' படத்தை விட சிறந்த படம்'' என்றார்.

'பீஸ்ட்' படம் உங்களுக்கு தமிழில் சரியான அறிமுகம்தானா? என்று கேட்டதற்கு, 'நல்ல என்ட்ரி இல்லை. ஆனால், ஒரு பெரிய படத்தில் நடிக்கும்போது, அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வரும்'' என்று தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்து, விஜய் ரசிகர்களை ஆவேசமாக்கி இருக்கிறது. இது தொடர்பாக பெரும்பாலான விஜய் ரசிகர்கள், 'படம் பிடிக்கவில்லை என்றால் ஏன் நடிக்க அவர் சம்மதித்தார்? அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு படத்தை பார்க்கவில்லை என சொல்வது நியாயமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SCROLL FOR NEXT