தமிழ் சினிமா

வடபழனி வணிக வளாகத்தில் ரகசியமாக நடந்த 2.0 படப்பிடிப்பு

ஸ்கிரீனன்

ரஜினி நடித்து வரும் '2.0' படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ப்ரோம் மாலில் அதிகாலை ரகசியமாக நடத்தப்பட்டு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடத்தி வருகிறார்கள். மேலும், டெல்லி உள்ள மைதானத்திலும் சில முக்கிய காட்சிகளை அக்‌ஷய்குமாரை வைத்து படமாக்கி இருந்தது படக்குழு.

ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் சுமார் 350 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ப்ரோம் மாலில் அதிகாலை 2 மணிக்கு சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். இதில் அக்‌ஷய்குமார் மற்றும் சில நடிகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ரஜினி பங்கேற்கவில்லை. அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

இரவில் படப்பிடிப்பு நடத்தினால் ஆட்கள் எதுவும் இருக்கமாட்டார்கள் என்று திட்டமிட்டு பிரத்யேக அனுமதி வாங்கி நடத்தியிருக்கிறது படக்குழு.

SCROLL FOR NEXT