மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கும் படத்துக்கு 'மோகினி' என்று பெயரிட்டுள்ளார்கள்.
'நாயகி' படத்தைத் தொடர்ந்து, மாதேஷ் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் த்ரிஷா. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இப்படத்துக்கு 'மோகினி' என்று பெயரிட்டுள்ளார்கள். ஜூன் 2ம் தேதி முதல் லண்டனில் 40 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் 20 நாட்களும், 10 நாட்கள் பாங்காக்கிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
'காஞ்சனா 2' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த குருதேவ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிய இருக்கிறார்கள்.
பிரபல ஹாலிவுட் படமான 'ஹாரி பாட்டர்' படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் பணிபுரிந்த குழுவை இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளில் பணிபுரிய படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.