சென்னை: நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இந்த டீசரில் நிறைந்துள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இந்தப் திரைப்படம் உருவாகியுள்ளது. மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குநர் நவீன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிப்பாளர் டி.சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கொல்கத்தா மற்றும் ஐரோப்பாவில் இந்த படம் ஷூட் செய்யப்பட்டுள்ளது. மூடர் கூடம் படத்தை போலவே இந்த படத்திலும் வசனங்கள் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், சதிஷ் குமார், ரமீனா சென், சென்றாயன் ஆகிய நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். சுமார் 1.30 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் டீசர், அருண் விஜய் குரலில் கவனம் ஈர்க்கிறது.