நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் 'சூர்யா 41' திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
'நந்தா' 'பிதாமகன்' படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் சூர்யாவுடன் கைகோக்கிறார் இயக்குநர் பாலா. இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
'சூர்யா41' என்ற அடைமொழியுடன் உருவாகி வரும் இந்தப் படத்தில், கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ்.
இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யாவுடன் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது.
இந்நிலையில், படம் நிறுத்தப்பட்டதாக வந்த வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு, சிறு இடைவேளைக்கு பிறகு, விரைவில் துவங்குமென படக்குழு தெரிவித்துள்ளது.