'ஹிப் ஹாப்' ஆதி நடிக்கும் 'வீரன்' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இன்று தொடங்கியது.
'சிவகுமாரின் சபதம்' 'அன்பறிவு' படங்களைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிக்கும் புதிய படம் 'வீரன்'.
இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஃபேன்டஸி காமெடி, ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் பூஜையுடன் தொடங்கியது. 'ஹிப் ஹாப்' ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.