தமிழ் சினிமா

'சாமி... ஏதாவது வேலை இருக்கா?' - இளையராஜாவை சந்தித்து பாடல்களை ரசித்த ரஜினிகாந்த்

செய்திப்பிரிவு

இளையராஜாவின் நிகழ்ச்சி ஒத்திகைக்கு வந்த ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்.

இன்று காலை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், இசைஞானி இளையராஜா சந்தித்துப் பேசினார். வரும் ஜூன் 2-ம் தேதி இளையாராஜா தன்னுடைய 79-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி நடந்த இந்தச் சந்திப்பில் இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர்.

அப்போது இளையராஜா விடைபெறும்போது, 'சாமி... ஏதாவது வேலை இருக்குதா?' என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ''என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2 ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்'' என்று இளையராஜா கூறியுள்ளார்.

'அப்படியா... நானும் அங்கே வருகிறேன்' என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்துச் சென்றார்.

ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ஒத்திகைப் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த்.

இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர் இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார்.

இளையராஜா இசையில் 'மாமனிதன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT