தமிழ் சினிமா

'நீ விதைச்சது எல்லாமே முளைக்கும் பாவம் உட்பட' - கவனம் ஈர்க்கும் 'இரவின் நிழல்' படத்தின் ட்ரெய்லர் 

செய்திப்பிரிவு

பார்த்திபன் இயக்கத்தில் ஜூன் 24-ஆம் தேதி வெளியாக உள்ள 'இரவின் நிழல்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு பின்னர் பார்த்திபன், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கியுள்ளார். 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல 'இரவின் நிழல்' படம் நான் லீனியர் 'சிங்கிள் ஷாட்'டில் எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இதனிடையே இப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடக்கும் கதை. முறையற்ற உறவில் பிறக்கும் ஒரு குழந்தையுடைய வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு கால கட்டங்கள், முன்னும் பின்னுமாக 'நான் - லீனியர்' முறையில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் படத்தின் ட்ரெய்லர் உறுதி செய்கிறது. எனினும் படத்தின் கதை இது தான் என ஒரு முடிவுக்கு வராத வகையில் ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது. சில காட்சிகள் தைரியமாக ட்ரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, 'நீ விதைச்சது எல்லாமே முளைக்கும் பாவம் உட்பட' என பார்த்திபன் பேசும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT