ரஜினியின் 'கபாலி' படத்தை சென்னையில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க அக்ஷய்குமார் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நாளை(மே 13) முதல் தொடங்கவிருக்கும் '2.0' படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் இந்தி நடிகர் அக்ஷய்குமார். ஒரு நாள் முன்னதாகவே படப்பிடிப்பு பணிகள், மேக்கப் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வந்திருக்கிறார்.
லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் இசையை, அக்ஷய்குமார் தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் வெளியிட்டார். அப்போது லைக்கா நிறுவனம் தலைமை செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம் 'கபாலி' டீஸரை அக்ஷய்குமாரிடம் காண்பித்திருக்கிறார். அவரிடம் கபாலி திரைப்படத்தை சென்னையில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க விரும்புவதாக அக்ஷயகுமார் தெரிவித்திருக்கிறார்.
'2.0' படத்தில் வசீகரனாக ரஜினியும், சிட்டியாக அக்ஷய்குமாரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் வில்லனாக சுதன்ஷூ பாண்டே நடித்து வருகிறார். சென்னை படப்பிடிப்பை முடித்தவுடன், மொரோக்கோ நாட்டில் முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது '2.0' படக்குழு.