முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'மருது' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மருது'. முத்தையா இயக்கி இருக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ராஜபாளையத்தில் நடத்தியிருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து சென்சார் அதிகாரிகளுக்கு 'மருது' திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு சில வசனங்களை மட்டும் மியூட் (mute) செய்ய சொல்லிவிட்டு 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
சென்சார் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து , மே 20-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
'மருது' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்றதைத் தொடர்ந்து, சுராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கத்தி சண்டை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.