தமிழ் சினிமா

நூறு சதவீத வாக்குப்பதிவு: சசிகுமார் அழைப்பு

ஸ்கிரீனன்

நூறு சதவீதம் வாக்குப்பதிவு சாத்தியமாகும் நாள் தான் ஜனநாயகத்துக்கான வெற்றி நாளாக இருக்கும் என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை பல்வேறு நடிகர்கள் வீடியோ வடிவிலும், தங்களது சமூக வலைத்தள பக்கத்திலும் வலியுறுத்தி வருகிறார்கள்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் சசிகுமாரும் வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவில் சசிகுமார் கூறியிருப்பது

"கிராமத்துல இருக்குற வயசான பாட்டிங்கக்கூட தட்டுத்தடுமாறி குச்சியை ஊன்றி ஓட்டுப்போடுறாங்க. அந்த பொறுப்புணர்வை பார்த்தாவது நாம பக்குவப்பட வேண்டாமா? நம்ம விரல்ல சுமக்கப்போற மை தான் இந்த தேசத்தோட தலையெழுத்தை எழுதப்போகுது.

நூறு சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகுற நாள்தான் ஜனநாயகத்துக்கான வெற்றி நாளாக இருக்கும். மறக்காமல் எல்லாரும் ஓட்டுப்போடுங்க" என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் சசிகுமார்.

SCROLL FOR NEXT