தமிழ் சினிமா

கவிஞர் காளிதாசன் மருத்துவ செலவுக்காக நடிகர் விஷால் ரூ.25 ஆயிரம் உதவி

செய்திப்பிரிவு

திரைப்பட பாடல் ஆசிரியர் காளிதா சனின் மருத்துவ செலவுக்காக விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

காரைக்குடி அடுத்த திருப்பத் தூரைச் சேர்ந்தவர் கவிஞர் காளிதாசன். தற்போது இவருக்கு 68 வயது ஆகிறது. பிரசாந்த் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் ‘தண்ணி குடம் எடுத்து’ என்ற பாடல், ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் ‘தலை மகனே கலங்காதே’ பாடல் உட்பட பல பிரபல பாடல்களை எழுதியவர். தொடர்ச்சியாக இசையமைப்பாளர் தேவா கூட்டணியில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவ செலவுக்கு கஷ்டப்பட்டு வந்தார்.

இந்நிலையில், இதுபற்றிய தகவல் அறிந்ததும் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் உடனடியாக தனது தேவி அறக்கட்டளை மூலம் கவிஞர் காளிதாசனின் மருத்துவ செலவுக்காக ரூ.25 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார். இத்தொகையை காளிதாசனின் மனைவி திலகவதியிடம் விஷால் நற்பணி இயக்கத்தினர் வழங்கினர்.

SCROLL FOR NEXT