இயக்குநர் ஆண்டனி சார்லஸ் இயக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் பிந்து மாதவி, ரைசா வில்சன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு `நாகா` என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படம் தொடர்பாக பேசிய இயக்குநர் ஆண்டனி சார்லஸ், ''இத்திரைப்படம் தி டாவின்சி கோட் பாணியில் ஒரு திரில்லர் படமாகும், இதில் புராணங்களும் நவீன கால நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடு எப்படி இருந்ததோ, அதுபோல நாக நாடும் இருந்தது. வரலாற்றுப் புத்தகங்கள் கூட அவ்வளவாகக் குறிப்பிடாத ஒன்று. நாகப்பட்டினம், நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் கடலோரப் பகுதிகள் இப்பகுதியை உருவாக்கியது.
1,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிராமத்தில் நடிகை பிந்து மாதவி இடம்பெறும் காட்சிகள் இருக்கும், புராணங்களை நிஜ உலகோடு பொருத்திப்பார்க்கும் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க உள்ளார். ரைசா வில்சனின் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் நிறைந்தது'' என்று தெரிவித்துள்ளார்.