தமிழ் சினிமா

'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு நிறைவு - ஜூனில் வெளியாக வாய்ப்பு

செய்திப்பிரிவு

நடிகர் சிம்பு நடித்திருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. 'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையாடா' படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்த காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

ராதிகா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எழுத்தாளர் 'ஜெயமோகன்' எழுதிய 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படக்குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். "வெந்து தணிந்தது காடு" படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT