தமிழ் சினிமா

விஜய் மிகவும் சின்சியராக ’பீஸ்ட்’ படத்தை முடித்துக் கொடுத்தார் - நெல்சன் திலீப்குமார்

செய்திப்பிரிவு

''நான் கஷ்டப்பட்டு நடிக்கத் தயார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், சொன்னதுபோலவே மிகவும் சின்சியராக 'பீஸ்ட்' படத்தை முடித்துக்கொடுத்தார் விஜய்'' என்று நெல்சன் திலீப்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'பீஸ்ட்' படம் நாளை வெளியாகிறது. இந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ''விஜய்தான் இந்த எல்லா தொடக்கத்தும் காரணம். கதை சொன்னேன், கதையை கேட்ட அவர் இந்தப் படத்தை பண்ணலாம் என்றார். உடனே அவர் சொன்ன விஷயம், ''ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க நான் தயார், மீதியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

மிகவும் சின்சியராக படத்தில் நடித்துக்கொடுத்தார் விஜய். படப்பிடிப்பில் என்ன பிரச்சினை வந்தாலும், சரிசெய்து கொடுத்து உதவி செய்தார். மால் ஒன்றை செட் போட வேண்டும் என முடிவெடுத்தபோது, தயாரிப்பு நிறுவனம் எங்களுக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. அதனால்தான் அச்சு அசலாக மால் ஒன்றை தத்ரூபமாக அமைக்க முடிந்தது. எங்களால் முடிந்த அளவுக்கு எங்களுடைய உழைப்பை கொடுத்திருக்கிறோம். படம் நாளை வெளியாகிறது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT