பீஸ்ட் படக்குழுவினருடன் விஜய் 
தமிழ் சினிமா

ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் படக் குழுவினருடன் பயணம் செய்த விஜய் - வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காரில் பீஸ்ட் படக் குழுவினருடன் நடிகர் விஜய் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பீஸ்ட். இந்தத் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய 'அரபிக் குத்து' பாடல் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழில் நேரடியாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்தும் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் 'பீஸ்ட்' படக்குழுவினருடன் அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இதில், இயக்குனர் நெல்சன், மனோஜ், அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, சதீஷ் ஆகியோர் விஜய்யின் காரில் ஜாலியாக பயணம் செய்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT