விஷால் நடித்துவரும் ’லத்தி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்துக்குப் பிறகு நடிகர் விஷால் 'லத்தி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கும் இந்தப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
போலீஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 6-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'லத்தி' படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் 12-வது திரைப்படம் 'லத்தி' என்பது குறிப்பிடத்தக்கது.