தமிழ் சினிமா

ஆங்கில படத்துக்காக இளையராஜா வென்ற சர்வதேச விருது

செய்திப்பிரிவு

இளையராஜா தான் இசையமைத்த ஓர் ஆங்கில படத்துக்காக சர்வதேச விருது வென்றுள்ளார்.

வெற்றிமாறனின் 'விடுதலை', விஷாலின் 'துப்பறிவாளன் 2', விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்', சிபி சத்யராஜின் 'மாயோன்', விஜய் சேதுபதியின் 'மாமனிதன்', 'நினைவெல்லாம் நீயடா', சுசிகணேசனின் 'வஞ்சம் தீர்த்தாயடா' என பல படங்கள் இளையராஜா இசையில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இவை தவிர, பிறமொழிகளில் இசையமைத்து வருகிறார். அந்த வகையில், 'ஏ பியூட்டிபுல் பிரேக் அப்' (a beautiful breakup) என்ற ஆங்கிலப் படத்துக்கும் இசையமைத்துள்ளார் இளையராஜா. அஜித்வாசன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த 5 நேச்சர்ஸ் மூவீஸ் இண்டர்நேசனல் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்தப் படம் அம்ஸ்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த விழாவில், சிறந்த பின்னணி இசைக்கான விருதை அந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. இதற்கான சான்றிதழ் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல் படக்குழு நிறுவனமும் இந்த விருது வென்றதை வீடியோ மூலமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, இளையராஜாவை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT