தமிழ் சினிமா

"எப்பவும் சிரிச்சிட்டே இருக்கீங்கன்னு சொல்றாங்க" - நடிகர் கார்த்தி

செய்திப்பிரிவு

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் 'மெட்ராஸ்'.

அட்டக்கத்தி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கேத்ரீன் ட்ரெஸா நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். வட சென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீடு, சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்த விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக வந்திருந்த கார்த்தியின் சகோதரர் நடிகர் சூர்யா பேசுகையில், "செட்ல நான் தான் சீனியர் மாதிரி இருக்கு. எல்லாரும் என்ன விட சின்னவங்களா இருக்காங்க. அவங்க நடிக்கறது அவ்வளவு அழகா இருக்குனு கார்த்தி சொன்னான். இந்த முடிவு கார்த்தி-க்கு இன்னொரு பரிணாமமா இருக்கும்னு நம்பறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, "ஒரே மாதிரியான கேரக்டர்ஸா வருதேனு போர் அடிச்சிட்டு இருந்தப்போ இந்த படம் வந்து அமைஞ்சது சந்தோஷமா இருந்துச்சு. ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் பண்றீங்க சார்னு குற்றசாட்டாவே மாறிடுச்சு. சிரிச்சா நல்லா இருக்குனு நீங்கதான சொன்னீங்க ஆனா எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கீங்க சார்னு சொல்றாங்க.

இந்த படம் வட சென்னை பத்தின அபிப்ராயத்தை மொத்தமா மாத்தறா மாதிரி இருந்துச்சு. கவிதை மாதிரி ரொம்ப அழகா ஒரு படம் எடுத்துருக்கோம். இயக்குநர் ரஞ்சித் சரியான கேப்டன். அழுத்தமான ஆளும் கூட. எல்லா விஷயத்தையும் இந்தப் படத்துல சீரியசா டீல் பண்ணியிருக்காரு. கண்டிப்பா அட்டக்கத்தி படத்துக்கு அப்பறம் வேற ஒரு ரஞ்சித்தை இந்தப் படத்துல பார்ப்பீங்க" என்று தெரிவித்தார்.

வரும் ஜூலை மாதம் 'மெட்ராஸ்' திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT