மே 6ம் தேதி '24' வெளியாக இருப்பதால், 'கோ 2' வெளியீட்டை மே 13ம் தேதிக்கு மாற்றி இருக்கிறார்கள்.
சரத் மாந்தவா இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ரானி நடிப்பில் தயாராகி வரும் படம் 'கோ 2'. லியோ ஜேம்ஸ் இசையமைத்து வரும் இப்படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தைத் தொடர்ந்து மே 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், அதே வேளையில் சூர்யா நடித்திருக்கும் '24' வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
தற்போது 'கோ 2' வெளியீட்டை மே 13ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அரசியலை கதைக்களமாக கொண்டது 'கோ2'. தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்திருப்பதால் 'கோ 2' படத்தை இந்தக் காலத்தில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.