தமிழ் சினிமா

விஜய் சேதுபதி - சீனு ராமசாமியின் மாமனிதன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மாமனிதன் படம் மே மாதம் 6ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், மலையாள நடிகை லலிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. யுவன் தயாரித்துள்ளதுடன் தனது தந்தை இளையராஜா உடன் இணைந்து இசையும் அமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த 2019ம் ஆண்டே முடிந்துவிட்டது.

எனினும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது. தென்மேற்குப் பருவக்காற்று', 'தர்மதுரை', 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களுக்கு பிறகு சீனுராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவது படம், இளையராஜா - யுவன் இணைந்து முதல் படம் என பல எதிர்பார்ப்புகள் இந்தப் படத்துக்கு உள்ளது.

இந்நிலையில் வரும் மே 6ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. சில நாட்கள் முன் மாமனிதனை ஆர்கே சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் ரிலீஸ் செய்வதற்காக வாங்கியது. அதன்படி வரும் மே 6ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'தர்மதுரை’ படத்தை நடிகர் ஆர்.கே சுரேஷ் தயாரித்திருந்தார். இப்போது அதேபோல் இந்தப் படத்தையும் வாங்கி வெளியிட இருக்கிறார்.

இதனிடையே, அதே மே மாதம் 20ம் தேதி ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT