தமிழ் சினிமா

'வாடிவாசல்' டெஸ்ட் ஷூட்: சூர்யா,  வெற்றிமாறன், கலைப்புலி தாணு கலந்துகொண்ட வைரல் போட்டோஸ்

செய்திப்பிரிவு

'வாடிவாசல்' டெஸ்ட் ஷூட்டிங் நடந்து வரும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன். அதனைத் தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இதில் சூர்யா நாயகனாக நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார். ஜல்லிக்கட்டு பற்றி பேசும் படமாக எடுக்கப்படவுள்ளது. 'வாடிவாசல்' படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு செட் அமைத்து ஷூட்டிங் நடந்துள்ளது. இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன், கலைப்புலி தாணு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மூவருக்கும் தலைப்பாகை அணிவித்து பூஜை செய்த பொருட்களை வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதேபோல் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஜல்லிக்கட்டு செட்டில் வாடிவாசல் அருகே நிற்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

'வாடிவாசல்' அப்டேட் கேட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தீனிபோடும் வகையில் இப்புகைப்படங்கள் அமைந்துள்ளதால் வரவேற்பை பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT