சிவாஜி கணேசன் விதைத்த விதைகளில் நானும் ஒருவன் என்று கமல்ஹாசன் பேசினார்.
ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக் கத்தில் டி.இமான் இசையமைத்து விக்ரம்பிரபு நடித்த ‘வாகா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென் னையில் நடைபெற்றது. இப்படத்தின் இசை குறுந்தகடை வெளியிட்டு கமல்ஹாசன் பேசிய தாவது :
‘தேவர் மகன்’ படத்தில் ‘விதை நான் போட்டது’ என்ற வசனத்தை எழுதியிருப்பேன். அதை சிவாஜி கணேசன் பேசியிருப்பார். அந்த விதைகளில் ஒன்றுதான் நான். சின்ன வயதில் என்னை மடியில் தூக்கி வைத்திருப்பார். அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று அப்போது எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர் மாமா, சிவாஜி மாமா இருவரிடமும் எப்போது வேண்டு மானாலும் போய் விளையாடலாம் என்று நினைக்கும் சின்ன வயது அது. மறுபடியும் அவர் களை பார்க்க முடியுமா? என்று அவர்களுடைய வீட்டை கடக்கும் போதெல்லாம் பார்த்த பல ரசிகர்களில் நானும் ஒருவன்.
சிவாஜி வீட்டின் மூத்த மகனாக இங்கு வந்திருக்கிறேன். ‘தேவர் மகன்' படத்தில் சிவாஜிக்கு போய் எப்படி வசனம் சொல்லிக் கொடுப் பது என பயந்தது உண்டு. வசனம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டதே அவரிடம்தான். ஆனால், அவரை விட பணிவான நடிகரை இதுவரை நான் பார்த்த தில்லை. பார்க்க கம்பீரமாக இருந் தாலும், பூனைக் குட்டியாக மாறி விடுவார். வசனம் நன்றாக இருந் தால், ‘‘அதை எப்படி சொல்ல வேண் டும் என்று சொல்லுப்பா’’ எனக் கேட் பார். அந்த ஊக்கம் ‘தேவர் மகன்' படம் முழுவதும் வியாபித்தது. அங் கிருந்துதான் நான் கற்றுக்கொண் டேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்பதற்காக நன்றி சொன்னார் கள். அதை என்னை அந்நியப்படுத் தியதாக நினைக்கிறேன். கூப்பிடா மல் விட்டுவிடாதீர்கள். வரமுடிய வில்லை என்றால்கூட ஸ்கைப்பில் வந்தாவது பேசுவேன் என்றார், கமல்ஹாசன்.