தமிழ் சினிமா

'உடையை வைத்து மதிப்பிடுவது எளிதாகிவிட்டது' - சமந்தா ஆதங்கம்

செய்திப்பிரிவு

உடை குறித்து மோசமான பதிவுக்கு நடிகை சமந்தா பதில் கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதில் அணிந்திருந்த உடை குறித்த எழுந்த கமெண்டுகளுக்கு பதில் கொடுத்துள்ளார் சமந்தா. அதில், "முன்முடிவோடு மனிதர்களை அனுகுவதென்றால் என்ன என்பதை ஒரு பெண்ணாக நான் நேரடியாக அறிந்திருக்கிறேன். பெண்கள் அணியும் உடை, இனம், கல்வி, சமூக அந்தஸ்து, தோற்றம், தோலின் நிறம் ஆகியவற்றை கொண்டு அவர்களை மதிப்பீடு செய்வது நீண்டுகொண்டே உள்ளது. ஒரு நபர் அணியும் ஆடைகளின் அடிப்படையில் அவரைப் பற்றி தீர்மானிப்பது எளிதான காரியமாக மாறியுள்ளது. நாம் 2022ம் ஆண்டில் இருக்கிறோம்.

ஒரு பெண்ணை அவரின் அலங்கார பொருட்களை கொண்டு மதிப்பீடு செய்வதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமா. நம் இலட்சியங்களை வேறொருவர் மீது முன்வைப்பது யாருக்கும் எந்த நன்மையையும் செய்யவில்லை. ஒரு நபரை நாம் அளவிடும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை மெதுவாக மாற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதேபோல் இந்தியில் வருண் தவானுடன் ராஜ் மற்றும் டிகே இயக்கும் 'சிட்டாடல்' படத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT