தமிழ் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு.ராஜசேகர், விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து ‘தாகபூமி’ என்று குறும்படம் எடுத்துள்ளார். இந்தக் கதையைத் திருடி, ‘கத்தி’ திரைப்படத்தை இயக்கியதாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அன்பு.ராஜசேகர் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கு, தஞ்சை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெறுகிறது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக் கோரி, ‘தாகபூமி’ உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

‘தெறி’க்கும் தடை வேண்டும்…

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசும் போது, “இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினையில் நியா யம் கிடைக்கும்வரை, விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து, மனு அளிக்க உள்ளோம். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்” என்றனர்.

SCROLL FOR NEXT