தமிழ் சினிமா

அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ‘தீயவர் குலைகள் நடுங்க’

செய்திப்பிரிவு

அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

ஜிஎஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படப்பிஜையுடன் தொடங்கப்பட்டது. தினேஷ் லட்சுமணன் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராம்குமார் சிவாஜிகணேசன், ஜி.கே.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்னணியில் அழுத்தமான க்ரைம் - த்ரில்லர் பாணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு கூறுகிறது.

தற்போது இந்தப் படத்துக்கு ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனத் தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை விஜய் சேதுபதி, விஷால், விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்கள்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக பரத் ஆசீவகன், ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு, எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT