தமிழ் சினிமா

ஆர்.ஜே.பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்!

செய்திப்பிரிவு

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

‘பதாய் ஹோ’ தமிழ் ரீமேக்கினை இயக்கி நாயகனாக நடித்து முடித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தான் அடுத்து இயக்கி, நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனித்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.

இதற்கிடையே புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கவுள்ளார். இந்தப் புதியப் படத்தின் பூஜை வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் ஆர்.ஜே.பாலாஜியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், படத்தில் கதைப்படி ஆர்.ஜே.பாலாஜிக்கு நாயகியாக இன்னொருவர் நடிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளது படக்குழு. முழுக்க சென்னையிலே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளார்கள்.

மார்ச் 23-ம் தேதி முதல் சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT