தமிழ் சினிமா

90 கிலோவுக்கு உடல் எடையை அதிகரிக்கும் சிம்பு

ஸ்கிரீனன்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்காக உடலமைப்பை முழுவதுமாக மாற்றி 3 வேடங்களில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. இப்படத்தை ரெபில் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தீபன் பூபதி தயாரிக்க இருக்கிறார்.

3 வேடங்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்புவின் ஒப்பனைக்கு விட்டா நிறுவனத்தின் ஷான் ஃபூட் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக ஷான் ஃபூட் ஒப்பனையில் சிம்புவுக்கு தனியாக மேக்கப் போட்டு பார்த்திருக்கிறார்கள்.

3 வேடங்களில் ஒரு வேடத்திற்கு 90 கிலோ உடலமைப்பு உள்ளது. அதற்காக சிம்பு ஏப்ரல் மாதத்திற்குள் 90 கிலோ உடலமைப்பை மாற்றி, அதற்கான படப்பிடிப்பை முதலில் துவங்கவிருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து 70 கிலோவுக்கு உடல் எடையைக் குறைத்து மற்றொரு வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வேடத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முழுவதுமாக உடல் எடையைக் குறித்து மற்றொரு வேடத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு.

இதுவரை சிம்பு நடிப்பில் வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT