தமிழ் சினிமா

டிஜிட்டல் பரிமாணத்தில் ‘கர்ணன்’: 8-ம் தேதி வெளியாகிறது

செய்திப்பிரிவு

சிவாஜிகணேசன் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் டிஜிட்டல் பரிமாணத்தில் மீண்டும் ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகிறது.

சிவாஜிகணேசன் நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டில் டிஜிட்டல் பரிமாணத்தில் ரிலீஸாகி பல தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் வடிவத்தில் இப்படம் ரிலீஸாக உள்ளது.

இதுகுறித்து திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் சொக்கலிங்கம் கூறும்போது, “‘சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் ரிலீஸாகி 52 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பொன்விழா ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாகவும், படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனை கவுரவிக்கும் விதமாகவும் இப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் ரிலீஸாகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரிலீஸான போது 5.1 சவுண்ட் டிராக் தொழில்நுட்பத்தில் வெளியிட்டோம். தற்போது 7.1 சவுண்ட் டிராக் தொழில்நுட்பத்தில், தெளிவான டிஜிட்டல் பிரிண்ட் வடிவத்தில் தமிழகமெங்கும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT