தமிழில் ‘18 வயசு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘ரம்மி’, ‘புரியாத புதிர்’ உட்படபல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் பணி நடந்து வருகிறது. அதில் இருந்து ஏதும் செய்தி வந்தால், புறக்கணிக்கவும்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காயத்ரி ஷங்கர். நடிகர் துல்கர் சல்மானின் இன்ஸ்டாகிராம் கணக்கு நேற்று முன்தினம் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.