தமிழ் சினிமா

பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘முசாசி’. ஆக்சன் எண்டர்டெய்னர் படமாக உருவாகும் இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகி யாரும் கிடையாது. பிரபுதேவாவுடன் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், ‘மாஸ்டர்’ மகேந்திரன், தங்கதுரை, மகேஷ், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு எஸ்.என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜான் பிரிட்டோ பொருட்செவில் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படம் தவிர்த்து ‘பகீரா’, ‘யங் மங் சங்’, ‘மை டியர் பூதம்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட படங்கள் பிரபுதேவா நடிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் ‘பகீரா’ மற்றும் ‘மை டியர் பூதம்’ ஆகிய படங்களின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT