நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு நிதி திரட்டுவதற்காக ‘நட்சத்திர கிரிக்கெட் போட்டி’ சென்னையில் இன்று நடக்கிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள் கிறார்கள்.
கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமை யிலான ‘பாண்டவர் அணி’ வெற்றி பெற்றதை அடுத்து, அதன் முதல் செயற்குழு கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர் பாக ஆலோசனை நடத்தப்பட் டது. கட்டிடத்தை கட்ட நிதி திரட்டு வதற்காக திரையுலகினர் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ‘ஜெயம்’ரவி, விஜய் சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் மோது கின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை நடை பெறும் இப்போட்டியில் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொள்கிறார்கள்.
போட்டிக்கு நடுவே திரை நட் சத்திரங்களின் நடனம், மிமிக்ரி, காமெடி உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின்போது சமீபத்தில் பத்ம விபூஷண் விருது பெற்ற ரஜினிகாந்த நடிகர் சங்கத்தால் கவுரவிக்கப் படுகிறார்.