தமிழ் சினிமா

ஏப்ரல் 29-ல் கமல், ஸ்ருதி படப்பிடிப்பு தொடக்கம்

ஐஏஎன்எஸ்

நடிகர் கமல்ஹாசன், அவர் மகள் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த செய்தியை கமல்ஹாசன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாயின. தொடர்ந்து, கமல் தரப்பிலும் இந்த செய்தி உறுதிசெய்யப்பட்டது. மேலும், கமல் மகள் ஸ்ருதி ஹாசனும் இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

நடிகர் மாதவன், ட்விட்டரில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து விசாரிக்க, அதற்கு பதிலளிக்கையில், படப்பிடிப்பு விவரம் பற்றி கமல்ஹாசன் பகிர்ந்திருந்தார். "ஸ்ருதியுடன் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 29ம் தேதி தொடங்குகிறது" என அந்த ட்வீட்டில் குறிப்பிடுள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

SCROLL FOR NEXT