தமிழ் சினிமா

வாலுவைத் தொடர்ந்து கன்னி ராசி

செய்திப்பிரிவு

சிம்பு நடிப்பில் 'வாலு' படத்தினை இயக்கி வரும் விஜய் சந்தர், அப்படத்தினைத் தொடர்ந்து 'கன்னி ராசி' என்னும் படத்தினை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் 'வாலு' படத்தினை இயக்கி வருகிறார் விஜய் சந்தர். தமன் இசையமைத்து வரும் இப்படத்தினை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படத்தினை வெளியிட பணியாற்றி வருகிறார்கள்.

கடைசி பாடல் மட்டும் பாக்கி இருப்பதால், விரைவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்பாடலில் ரஜினி, கமல், அஜித் ஆகியோரது கெட்டப்-களில் சிம்பு நடனமாட இருக்கிறார்.

'வாலு' படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் சந்தர், அடுத்து 'கன்னி ராசி' என்னும் படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இப்படத்தின் நாயகனாக ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருடன் சூரி, வி.டி.வி கணேஷ் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். படத்தின் நாயகியாக 9 பேர் நடிக்க இருக்கிறார்கள். த்ரிஷா, நயன்தாரா, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

'வாலு' வெளியான பிறகு முழுக்க இப்படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார்கள். இப்படத்தினை தயாரிக்க பல்வேறு முன்னணி தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT