'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கத்தில் ஜெய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார் சி.வி.குமார்.
மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி நடித்திருக்கும் 'புகழ்' திரைப்படம் தற்போது தான் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிக்கவிருக்கும் படத்திற்கு கதைகளைக் கேட்டு வந்தார் ஜெய்.
பல இயக்குநர்கள் கூறிய கதைகளில் 'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உடனே மே மாதத்தில் இருந்து தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.
சி.வி.குமார் தயாரிக்கவிருக்கும் இப்படம் ஒரு போலீஸ் கதையாகும். ஜிப்ரான் இசையமைப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ஜெய் உடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் 'சென்னை 28' இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெய்.