தமிழ் சினிமா

விஷால் - எஸ்.ஜே.சூர்யா இணையும் ‘மார்க் ஆண்டனி’

செய்திப்பிரிவு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்துக்கு ‘மார்க் ஆண்டனி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஏ.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இது விஷால் நடிக்கும் 32-வது படமாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். 'லத்தி' படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். பணிபுரிகின்றனர்.

இப்படத்துக்குப் பிறகு விஷால் நடிக்கவுள்ள 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘மார்க் ஆண்டனி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 1960களின் காலகட்டத்தில் நடந்த ஒரு கேங்க்ஸ்டர் கதையைத் தழுவி இப்படம் உருவாகவுள்ளது.

SCROLL FOR NEXT