தமிழ் சினிமா

ஆஸ்கர் கிடைத்தது போல் உணர்கிறேன்: இறுதிச்சுற்று ரித்திகா சிங் பூரிப்பு

ஐஏஎன்எஸ்

தேசிய விருது கிடைத்திருப்பதை ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்வதாக ரித்திகா சிங் குறிப்பிட்டு இருக்கிறார்.

63வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. 'இறுதிச்சுற்று' படத்தில் நடித்ததிற்காக சிறப்பு தேசிய விருது ரித்திகா சிங்கிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து ரித்திகா சிங் கூறும்போது, "வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். ஆஸ்கர் விருது வென்றிருப்பது போன்று உணர்கிறேன். 'இறுதிச்சுற்று' மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படத்திலேயே இப்படி ஒரு விருது கிடைக்கப் பெறுவது ரொம்ப பெரிய விஷயம். இன்னும் நன்றாக செயல்படுவதற்கான ஒரு ஊக்கமாக கருதுகிறேன்.

இயக்குநர் சுதா மற்றும் மாதவன் குறிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான ஆதரவும், என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையும் இல்லையென்றால் நான் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன் " என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT