தமிழ் சினிமா

"பைக் இருந்தால் அஜித் பசியைக் கூட மறந்துவிடுவார்" - ஹெச்.வினோத் பகிர்வு

செய்திப்பிரிவு

"அஜித்திடம் ஒரு பைக் இருந்தால் பசியைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டார்" என்று இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "அஜித்துக்கு பைக் பிடிக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த செய்தி. பசியெடுத்தால் கூட அவரிடம் ஒரு பைக் இருந்தால் பசியைப் பற்றி கவலைப்பட மாட்டார். வேகமாக பைக் ஓட்டுவது, வீலிங் செய்வது போன்ற நிறைய ஸ்டன்ட்களை அவர் செய்துள்ளார். அதை தானே செய்வதுதான் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, ஒரு பைக் ரேசர் நேரடியாக எஸ்.ஐ ஆக பணியமர்த்தப்பட்டார். நாங்கள் அந்தச் சம்பவத்தை தழுவி இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளோம்" என்று ஹெச்.வினோத் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT