தமிழ் சினிமா

முன்பே எழுதிய 'வலிமை' கதையை அஜித்துக்காக மாற்றியமைத்தேன்: ஹெச்.வினோத் விளக்கம்

செய்திப்பிரிவு

முன்பே எழுதிய 'வலிமை' படத்தின் கதையை அஜித்துக்காக மாற்றியமைத்ததாக இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நாங்கள் இந்தப் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கினோம். அதன் பிறகு தான் கரோனா பரவல் தொடங்கியது. ஒரு படத்தை எடுப்பதே கடினமானது எனும்போது இந்த சூழல் அதை இரட்டிப்பாக்கியது. ஆனால் எல்லாரும் விரும்பும் ஒரு திரைப்படமாக வலிமை உருவாகியுள்ளது என்று நம்புகிறேன். சமீபத்தில் நான் கொடுத்த பேட்டியில் ‘வலிமை’ கதை வேறொரு நடிகருக்காக எழுதியதாக தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மை அல்ல. நான் இந்த கதையை நீண்ட காலத்துக்கு முன்பு எழுதினேன், அஜித் இந்த படத்துக்குள் வந்த பிறகு, அவருக்கு ஏற்றவாறு நாங்கள் அதை மாற்றினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT