கோப்புப் படம் 
தமிழ் சினிமா

நினைவிலும், பேச்சிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் கே.பாலசந்தர்: கமல்ஹாசன்

செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் கே.பாலசந்தர் ஏழாண்டுகளாக என் நினைவிலும், பேச்சிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "வங்காளமும் மலையாளமும் திரையுலகில் அறிவால் ஜீவித்துக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்க் குரலாய் எழுந்தவர் கே.பாலசந்தர். ஏழாண்டுகளாக அவர் என் நினைவிலும் பேச்சிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT