தன்னுடைய 10வது பிறந்த நாளைக் கொண்டாடிய ட்விட்டர் தளம், ரஜினியைக் கெளரவப்படுத்தி இருக்கிறது.
நேற்று சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது 10வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 10 ஆண்டுகளை முன்னிட்டு, 10 முத்திரை பதித்த தருணங்களை ட்விட்டர் இந்தியா (@twitterindia) என்ற பக்கத்தில் வெளியிட்டது.
இதில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் இருந்து சென்னை வெள்ளப் பாதிப்பு வரை எந்தளவுக்கு ட்விட்டர் பக்கத்தில் பேசப்பட்டன என்பதை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதில் இந்திய நடிகர்களில் ரஜினிகாந்த் தங்களுடைய வலைத்தளத்தில் இணைந்ததை சிறப்பான தருணமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். ரஜினியின் முதல் ட்வீட்டை மேற்கோள்காட்டி இதனை வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேலும் சச்சினின் ஒய்வு அறிவிப்பு, மோடியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, டெல்லி கற்பழிப்பு உள்ளிட்டவற்றை தங்களுடைய முத்திரை பதித்த தருணங்களாக ட்விட்டர் தளம் அறிவித்திருக்கிறது.