தமிழ் சினிமா

வேலையை மட்டுமே காதலித்து வருகிறேன் : ஹன்சிகா

ஸ்கிரீனன்

இப்போது சினிமா வேலையை மட்டுமே காதலித்து வருகிறேன் என்று நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கிறார்.

தமிழில் 'அரண்மனை', 'மீகாமன்', 'ரோமியோ ஜுலியட்', 'வாலு', 'வேட்டை மன்னன்' என வரிசையாக படங்களை நடித்து வருகிறார் ஹன்சிகா. தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு - ஹன்சிகா பிரிந்த செய்தியைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஹன்சிகா காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனை ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் மறுத்திருக்கிறார்.

இது குறித்து ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில், " நான் மீண்டும் காதலிப்பதாக முன்னணி வார இதழில் கவர்ச்சிகரமான தலைப்பிட்டிருந்தார்கள். ஹா.. ஹா.. நான் இப்போதைக்கு எனது வேலையை மட்டுமே காதலித்து வருகிறேன்." என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT