ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு, காளி, நந்திதா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'முண்டாசுப்பட்டி' படத்தினை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
விஷ்ணு விஷால், காளி, நந்திதா, ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'முண்டாசுப்பட்டி'. ராம் குமார் இயக்கி இருக்கும் இப்படத்தினை சி.வி.குமார் தயாரித்து இருந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.
இப்படத்தினை ரஜினிகாந்திற்கு திரையிட்டு காட்டினார்கள். படத்தைப் பார்த்த பின், முண்டாசுபட்டி தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார்.
விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டினார் ரஜினி. குறிப்பாக 'முனிஸ் காந்த்' கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாகவும் கூறினார்.
குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி. குமாருக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.