'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ட்ரெய்லர் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியானது. இது, சென்னைவாசிகளை வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
கார்த்தி, கேத்தரின் தெரசா உள்ளிட்ட பலர் நடிக்க, 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் 'மெட்ராஸ்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
"வடசென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்கிற படம் தான் 'மெட்ராஸ்'. அவர்களின் வாழ்க்கையை, கொண்டாட்டத்தை, அரசியலை சொல்கிற இயல்பான பதிவாக 'மெட்ராஸ்' படம் இருக்கும். வடசென்னை சமூகத்தின் பாசாங்கற்ற ரத்தமும் சதையுமான பதிவாக இருக்கும்.
இது தன்நபர் சார்ந்த கதை அல்ல. ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையின் பதிவு, அங்கு வாழும் ஒரு இளைஞனாக கார்த்தி வாழ்ந்து இருக்கிறார். எங்கும் அவர் தனித்து வெளிப்பட மாட்டார். மண்ணோடு மக்களோடு அந்தக் கலாச்சார சூழலோடு கலந்த ஒரு குணச்சித்திரமாகவே தெரிவார்" என்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
தற்போது இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள 'மெட்ராஸ்' படத்தின் ட்ரெய்லர்: