தமிழ் சினிமா

கமல் நடிக்கும் த்ரிஷ்யம் ரீமேக்கின் கதைக்களமும் பின்புலமும்!

ஸ்கிரீனன்

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தினை தமிழில் திருநெல்வேலி பின்னணியில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிக்க ஜிது ஜோசப் இயக்கிய மலையாள படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

மற்ற மொழிகளில் இப்படத்தினை ரீமேக் செய்ய பெரும் போட்டி நிலவியது. இறுதியில் இப்படத்தின் மொத்த ரீமேக் உரிமையையும் ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் வாங்கினார்.

தெலுங்கில் இப்படத்தின் ரீமேக்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க ஸ்ரீப்ரியா இயக்கி இருக்கிறார். 'துருஷ்யம்' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்து முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழில் கமல்ஹாசன் நடிக்க இப்படம் விரைவில் துவங்க இருக்கிறது. மீனா வேடத்தில் கெளதமி நடிப்பார் என கூறப்படுகிறது. மலையாளத்தில் 'த்ரிஷயம்' பட கதாபாத்திரங்களின் பின்னணி கிறிஸ்துவ மதத்தை சார்ந்ததாக அமைக்கப்பட்டிருந்தது. தமிழில் சைவ வேளாளர் பின்புலம் கொண்டு காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இதற்காக திருநெல்வேலியில் தற்போது படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. 'உத்தமவில்லன்' பணிகள் முடிந்தவுடன், இப்படத்தின் பணிகள் துவங்க இருக்கிறது.

SCROLL FOR NEXT