தமிழ் சினிமா

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி படத்தில் வில்லனாகும் கௌதம் மேனன்

செய்திப்பிரிவு

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘புரியாத புதிர்’, 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இப்படங்களைத் தொடர்ந்து பிந்து மாதவி, தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'யாருக்கும் அஞ்சேல்' என்ற படத்தை இயக்கி முடித்தார். கடந்த வருடமே இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானாலும், கரோனா நெருக்கடியால் படத்தின் வெளியீடு குறித்து இன்னும் முடிவாகவில்லை.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வந்தார். இதில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ‘மைக்கேல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு இன்று (நவ 22) வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT